Sep 22, 2019

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

May 23, 2019

இன்றைய கதை

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

 தெனாலி ராமன் கதைகள் - புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
(Thenali Raman Stories - Pulikku Piranthathu Poonai Aaguma)


ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு  அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள்  மலர்ந்தன. அங்கு வந்த  தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள்  பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான்.

அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை  நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம்.  வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள  திருடிய ரோஜா பூக்களை பார்" என்று அவன் கைகளை காண்பிக்கச்  செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன்  மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து  தான்  அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன்  மேல் போர்த்திவிட்டான்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும்  என்று கூறிவிட்டுச் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.

காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார்.

காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது" என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார்.

அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார்

அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என்  தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி  செய்தார்கள்" என்று கூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.

தெனாலியும்  அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

May 19, 2019

TISSUE

KIDNEY

பொதுத்தேர்வின் சாதனை துளிகள்


புத்தகங்கள் டவுன்லோட் செய்ய..

உடனடி மறுதேர்வு அட்டவணை


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்- ஏப்ரல்'2019

பள்ளி - ஓர் அறிமுகம்

           மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி 50 வருடங்களுக்கும் மேலாக செயல்படும் வரலாற்று சிறப்பு மிக்க பள்ளியாகும் . இப்பள்ளி நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம் , சி.எச்.பி காலனியில் , நகரின் மையத்தில் இயங்கி வருகிறது.

        இப்பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு நிதியுதவியுடன் முற்றிலும் இலவசமாக கல்வி கற்றுத்தரப் படுகிறது. 11,12 ஆம் வகுப்புகள் சுயநிதிப்பிரிவாக இயங்குகிறது.

          இப்பள்ளியின் இணைப்பள்ளியான நடுநிலைப்பள்ளி ஜோதி திரைஅரங்கம் அருகில் இயங்குகிறது . அங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு நிதியுதவியுடன் முற்றிலும் இலவசமாக கல்வி கற்றுத்தரப் படுகிறது.

May 18, 2019

மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு


  • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான  மாணவர் சேர்க்கை நமது பள்ளியில்  தற்போது நடைபெற்று வருகிறது.
  • பிள்ளைகளின் எதிர் காலம் சிறப்பாக அமையவேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நமது பள்ளியில் சேர்க்கலாம்.
  • திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும் , காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை , மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
  • பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் செல்லங்களின் எதிர்காலத்தை வலிமைப்படுத்துமாறு வேண்டுகிறோம்.